மகாராணியார் வரை பயன்படுத்திய Tupperware நிறுவனம் திவால்: கேலி செய்யும் மக்கள்
பல நாடுகளில் பிரபலமான Tupperwareஇன் கதை உங்களுக்குத் தெரியுமா?
1946இல் துவக்கப்பட்ட அந்நிறுவனம் திவாலானதாக தற்போது செய்தி வெளியாகியுள்ள நிலையில், Tupperwareஇன் வரலாறு குறித்து அறிந்துகொள்ளலாம்.
மகாராணியார் வரை பயன்படுத்திய Tupperware
1946ஆம் ஆண்டு, அமெரிக்காவின் New Hampshire என்னுமிடத்தைச் சேர்ந்த Earl Tupper என்பவர், Great Depression என்னும் பொருளாதார பெருமந்த காலகட்டத்திலிருந்து அமெரிக்கர்கள் விடுபட்டபின், உணவு வீணாகாமல் தடுப்பதற்காக, உணவை பத்திரப்படுத்தி வைக்கும் Tupperware என்னும் பாலிஎத்திலீன் பாத்திரங்களை உருவாக்கினார்.
நிர்வாகம் என்பது பெண்களுக்கானது அல்ல என கருதப்பட்ட காலகட்டத்தில், Brownie Wise என்னும் பெண், பிரபலங்களை சந்தித்து Tupperware குறித்து விளக்கி, ஒரு ஆண்டுக்குள் இரண்டு மில்லியன் டொலர்கள் அளவுக்கு ஆர்டர்கள் பிடித்து சாதனை புரிந்தார்.
1954ஆம் ஆண்டு வாக்கில், அவர் 20,000 பெண் விற்பனையாளர்களை உருவாக்கியிருந்தார்.
1961ஆம் ஆண்டு, Tupperware நிறுவனம் பிரித்தானியாவில் கால் பதித்தது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்நிறுவனத்தில் தலைவரான Earl Tupper 1983ஆம் ஆண்டு மரணமடைந்த நேரத்தில், அந்நிறுவனம், 620 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு விற்பனையில் சாதனை படைத்து, உலகிலேயே அதிக விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியிருந்தது.
2016ஆம் ஆண்டு, பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் Tupperware பாத்திரம் ஒன்றைத்தான் பழங்கள் சாப்பிட பயன்படுத்துகிறார் என அவரது சமையல் கலைஞர் கூற, உடனடியாக Tupperware விற்பனை, 80 சதவிகிதம் அதிகரித்ததாம்.
நிறுவனம் திவால்: கேலி செய்யும் மக்கள்
ஆனால், இரண்டு நாட்களுக்கு முன், Tupperware நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து மக்கள் சமூக ஊடகங்களில் கேலியாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
tupperware going bankrupt is literally the most devastatingly shocking thing I've heard like ever like no just no just huh????? https://t.co/efPcQRBtdd
— a (@manchowjalebi) September 19, 2024
ஒரு கதை உண்டு, உழைத்துக் களைத்துப்போன மண் பானைகள் செய்யும் ஒரு மனிதர், கடவுளிடம் ஒரு வரம் கேட்டாராம்.
கடவுளே, என் பானைகள் உடையவே கூடாது என அவர் கடவுளிடம் வரம் கேட்க, கடவுளும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டாராம்.
உடனே, அந்த மனிதர், உடையாத பானைகள் கிடைக்கும் என விளம்பரம் செய்ய, கிட்டத்தட்ட ஊரில் இருந்த எல்லாரும் வந்து அவரிடம் பானைகளை வாங்கிச் செல்ல, காசு கொட்டோ கொட்டென்று கொட்ட, அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாகியுள்ளது.
ஆனால், அதற்குப் பின் யாரும் பானை வாங்க வரவில்லை. என்ன நடந்தது என்று யோசித்துப்பார்க்கும்போதுதான் அவருக்கு உண்மை புரிந்தது.
பானை உடையவேயில்லை என்றால் யார் புதிய பானை வாங்குவார்கள்!
All of us responsible for Tupperware's bankruptcy!!
— Charmi Chheda (@charmi04) September 19, 2024
I mean na hum school/office mein dabba khote na humari mummyian plastic use karne lagti ? ?
அதேபோலத்தான், Tupperwareம் நீண்ட காலம் உழைப்பதால், யாரும் மீண்டும் மீண்டும் அவற்றை வாங்கவில்லை, அதனால்தான் Tupperware நிறுவனம் திவாலாகிவிட்டது என்னும் ரீதியில் மக்கள் சமூக ஊடகங்களில் வேடிக்கையாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
Me: that's so sad I loved Tupperware :(
— Ruruen (@ruruen19) September 19, 2024
Also me: *used the same lunchbox I bought with pocket money in elementary school until graduated from uni* https://t.co/fZLtVf25OH
ஒரு பெண், Tupperware நிறுவனம் திவாலானதால் நான் மிகவும் கவலையாக இருக்கிறேன், நல்ல பாத்திரங்கள், ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது நான் வாங்கிய அதே லஞ்ச் பாக்ஸை, கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் வரை வைத்திருந்தேன் என்கிறார்.
2 Major reasons for Tupperware's bankruptcy:
— Samarth Srivastava (@SamarthSri_) September 18, 2024
1. Created long-lasting products that you don’t need to buy them again.
2. Indian mom to beat the shit out of you in case you lose it.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |