திடீரென ஊடகவியலாளர்கள் முதல் ஏராளமானோரை கைது செய்துள்ள நாடு
துருக்கி அதிகாரிகள், நேற்று திடீரென ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரை கைது செய்துள்ளனர்.
ஊடகவியலாளர்கள் முதல் ஏராளமானோர் கைது
நேற்று, துருக்கியில் வாழும் ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அதாவது, துருக்கி தலைநகர் அங்காராவில் நாளையும் நாளை மறுநாளும் (ஜூலை மாதம் 7ஆம் திகதி மற்றும் 8ஆம் திகதி), நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸ் உட்பட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

அதிகாரிகள், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே ரெய்டுகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்க, நேட்டோ உச்சி மாநாட்டின்போது ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே பொலிசார் இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே, ஜூன் மாத இறுதியில், இதேபோல, மாணவர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |