துருக்கியில் பாதுகாப்பு அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல்: 4 பேர் பலி, ஜனாதிபதி கண்டனம்!
துருக்கியில் பாதுகாப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
துருக்கியின் அங்காராவில் உள்ள பாதுகாப்பு தலைமை செயலகம் மற்றும் விண்வெளி நிறுவனம் மீது நடத்தப்பட்ட திடீர் பயங்கரவாத தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் 3 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், துருக்கி ஜனாதிபதி எர்டோகன் வழங்கிய தகவலில் 4 பேர் வரை உயிரிழந்து இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான சந்திப்பின் போது துருக்கி ஜனாதிபதி எர்டோகன் வெளிப்படுத்தினார்.
பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், மேலும் 14 பேர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் ஊடகத்தின் தகவலில், மிகப்பெரிய வெடிப்பு சத்தம் மற்றும் துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |