மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லொறி...32 பலி: துருக்கியில் பயங்கரம்
துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்தில் 32 பேர் பலி
லொறியின் பிரேக் அமைப்பு பழுதானதால் விபத்து ஏற்பட்டு இருப்பதாக அமைச்சர் தகவல்
துருக்கியில் அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
துருக்கியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டு அடுத்தடுத்த சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதாக தகவல் இதுவரை தெரியவில்லை.
சனிக்கிழமை காலை காஜியாண்டெப் மாகாணத்தின் தெற்கு நகரமான நிசிப் அருகே பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
REUTERS
இதனைத் தொடர்ந்து முதல் விபத்தில் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு மார்டினில் மக்கள் கூட்டத்தின் மீது லொறி ஒன்று மோதியதில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்துள்ளனர் என என்று துருக்கிய சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக ஃபஹ்ரெட்டின் கோகா ட்விட்டரில் தெரிவித்துள்ள தகவலில், மார்டின் மாகாணத்தின் டெரிக் நகரில் நடந்த சம்பவம், லொறியின் பிரேக் அமைப்பு பழுதானதால் ஏற்பட்டது, மற்றும் கூட்டத்தை தாக்கியது எனத் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கு அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: ஐரோப்பிய நாடுகளின் புதிய யோசனை...நாஜி கொள்கைக்கு சமமானது: ரஷ்யா குற்றச்சாட்டு
துருக்கில் சனிக்கிழமை நடந்த விபத்தில் 32 பேர் கொல்லப்பட்டத்துடன் 51 பேர் காயமடைந்து இருப்பது பெரும் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.