சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி
சமீபத்திய ஆண்டுகளில் இராணுவ ட்ரோன்களின் சிறந்த உற்பத்தியாளராக தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது துருக்கி.
ட்ரோன்களை வேட்டையாடி
தற்போது ஒரு நேரடி வலுவான ஆயுதம் ஒன்றை உருவாக்கி, எதிர்காலத்தில் ட்ரோன்களால் முன்னெடுக்கப்படும் போர்களுக்கு சவால்விட துருக்கி தயாராகியுள்ளது.
வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், எதிரிகளின் ட்ரோன்களை வேட்டையாடி அந்தரத்திலேயே அவைகளை சின்னாபின்னமாக்க வடிவமைக்கப்பட்ட லேசர்-ஆயுதம் பொருத்திய டாங்கியான ALKA-KAPLAN ஐ துருக்கி சமீபத்தில் வெளியிட்டது.
FNSS மற்றும் ROKETSAN நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கியுள்ள இந்த ALKA-KAPLAN டாங்கியானது நிகழ்நேரப் போர் சூழ்நிலையில் எதிரி ட்ரோன்களை வேட்டையாட, லேசர் ஆயுத அமைப்புடன் பொருத்தப்பட்ட ஒரு கலப்பின கண்காணிக்கப்படக் கூடிய வாகனமாகும்.
இந்த கவச வாகனமானது உலகிலேயே முதல் முறையாக துருக்கி உருவாக்கியுள்ளது. மேலும் இது உத்தியோகப்பூர்வமாக IDEF 2025 இல் காட்சிப்படுத்தப்படும். ALKA-KAPLAN என்பது KAPLAN கலப்பின கண்காணிக்கப்பட்ட தளம் மற்றும் ALKA இயக்கப்பட்ட சேசர் ஆயுத அமைப்பு ஆகியவற்றின் கலவையாகும்.
மேலும் செயற்கை நுண்ணறிவு திறன்கள் மற்றும் மின்காந்த செயற்பாடு ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்த டாங்கானது, ஒரு தீவிரமான போர் சூழ்நிலையில் ட்ரோன் அச்சுறுத்தல்களை முறியடிப்பதன் மூலம் வழக்கமான டாங்கிகள் மற்றும் முன்வரிசை வீரர்களுடன் தடையின்றி செயல்படவும் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக
மட்டுமின்றி, ALKA-KAPLAN இராணுவ ட்ரோன்கள் மற்றும் சிறிய வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க சக்திவாய்ந்த லேசர்களைப் பயன்படுத்துகிறது. இதன் துல்லியம் உறுதி செய்யப்பட்டால், ட்ரோன்களால் முன்னெடுக்கப்படும் நவீன காலப் போரை கடுமையாக மாற்ற முடியும்.
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்த சில நாடுகளில் சீனா மற்றும் அஜர்பைஜானுடன் துருக்கியும் இணைந்தது. மேலும் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் படைகளுக்கு Bayraktar TB2 போன்ற மேம்பட்ட இராணுவ ட்ரோன்களையும் துருக்கி வழங்கியது.
Bayraktar TB2 ட்ரோன்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய நிறுவல்களுக்கு எதிராக தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டன. சமீபத்தில் துருக்கியும் பாகிஸ்தானும் எதிர்காலத்திலும் இணைந்து செயல்படுவதாக ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,
பாகிஸ்தானுக்கு ALKA-KAPLAN அமைப்பை துருக்கி வழங்கலாம் என்ற அச்சத்தை பல நிபுணர்கள் தரப்பு தற்போது கலக்கத்துடன் முன்வைத்துள்ளனர். இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருமாறக்கூடும், அத்துடன் இந்திய ட்ரோன்களை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் திறனை இது கணிசமாக அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |