துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நொறுக்கி விழுந்த கட்டிடங்கள்
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
துருக்கியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7;10 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு துருக்கியில் ஏற்பட்ட 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதில், இஸ்தான்புல், இஸ்மீர் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், 15 க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
மேலும், சிந்திர்கி நகரில் உள்ள கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி 81 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வரும் துருக்கி உள்துறை அமைச்சர் Ali Yerlikaya, மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Balıkesir’in Sındırgı ilçesinde meydana gelen deprem sonrası AFAD, Jandarma, Emniyet, UMKE ve tüm ilgili kurumlarımız sahada görevinin başında. Devletimiz tüm imkânlarıyla vatandaşlarımızın yanında.
— Ali Yerlikaya (@AliYerlikaya) August 10, 2025
Depremden etkilenen tüm vatandaşlarımıza geçmiş olsun dileklerimi sunuyorum.… pic.twitter.com/Ov4sRD0BLs
2023 ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 53,000 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |