இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடி: மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும் ஒரு நாடு
இஸ்ரேல் தனது அண்டை நாடுகளுடன் ஒருபோதும் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவால் மட்டுமே இஸ்ரேல் இராணுவம் நீண்ட காலமாக காஸாவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
புதிய அச்சுறுத்தலாக
மட்டுமின்றி, தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் லெபனானில் ஹிஸ்புல்லாவுடனும், ஏமனில் ஹவுதிகளுடனும் மோதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதில், காஸா மக்களுக்கு ஆதரவாக செங்கடலில் இஸ்ரேலுக்கு பயணப்படும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹவுதிகளை அமெரிக்காவும் வேட்டையாடி வருகிறது.
மிக சமீபத்தில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு கொடூரமான போர் நடந்தது. இறுதியில், இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் அணு ஆயுத வசதிகள் மீது தாக்குதல் நடத்தி, போருக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், துருக்கி தங்கள் நாட்டிற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாக இஸ்ரேலிய நிபுணர்கள் நம்புகின்றனர். துருக்கி ஈரானை விட இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் இஸ்ரேல் கருதுகிறது.
அத்துடன் அமெரிக்கா முன்னெடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் சிரியாவுடன் இஸ்ரேல் நெருங்குவதை துருக்கி எச்சரித்துள்ளதுடன், பிராந்தியத்தில் புதிய சிக்கலை உருவாக்க வேண்டாம் என்றும் கோரியுள்ளது.
துருக்கி விட்டுவைக்காது
சிரியாவுடன் நீண்ட நெடிய உறவு கொண்டுள்ள நாடு துருக்கி. இதனால், சிரியாவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், அவர்களை துருக்கி விட்டுவைக்காது என்றும் எர்டோகன் மிரட்டல் விடுத்துள்ளார்.
துருக்கிய வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் பிடன் தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்று பதிலளித்துள்ளார்.
மேலும், வலுவான மற்றும் நிலையான சிரியாவை இஸ்ரேல் விரும்பவில்லை என்றும் சிரியாவை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தவே இஸ்ரேல் விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படியான ஒரு நகர்வுக்கு இஸ்ரேலை அனுமதிக்க முடியாது என்றும், துருக்கி ஒருபோதும் சிரியாவை கைவிடுவதில்லை என்றும் அமைச்சர் ஹக்கன் பிடன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |