மலைப்பகுதி ஹொட்டல் ஒன்றில் நடுங்கவைக்கும் சம்பவம்... உடல் கருகி பலியான பலர்
துருக்கியில் உள்ள பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 66 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோக்லு மலைப்பகுதி
துருக்கியின் கர்தல்காயாவில் உள்ள கிராண்ட் கர்தல் ஹொட்டலில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குறைந்தது 51 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். வடமேற்கு துருக்கியில் உள்ள போலு மாகாணத்தின் கொரோக்லு மலைப்பகுதியிலேயே தொடர்புடைய ஹொட்டல் அமைந்துள்ளது.
தலைநகர் இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 185 மைல்கள் தொலைவில் இந்த பிரபலமான ஸ்கை ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் வணிக உரிமையாளர் உட்பட நான்கு பேர் துருக்கிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹொட்டலின் உணவகத்தில் அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என்றே கூறப்படுகிறது. எரிந்த கட்டிடத்தைச் சுற்றி பல தீயணைப்பு வாகனங்கள் இருப்பதை வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.
உயிருக்கு பயந்து சிலர்
தீ விபத்தை அடுத்து குறைந்தது இரண்டு பேர் பீதியில் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்ததாக போலு ஆளுநர் தெரிவித்துள்ளார். 12 மாடிகளில், 161 அறைகள் கொண்ட அந்த ஹொட்டலில் சம்பவத்தின் போது 234 விருந்தினர்கள் தங்கியிருந்துள்ளனர்.
தீ விபத்தை அடுத்து உயிருக்கு பயந்து சிலர் விரிப்புகள் மற்றும் போர்வைகளைப் பயன்படுத்தி தங்கள் அறைகளில் இருந்து கீழே இறங்க முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் குறைந்தது ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேலும் 17 பேர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |