துருக்கி ஜனாதிபதி தேர்தல்: முடிவுக்கு வருகிறதா எர்டோகனின் சர்வாதிகார ஆட்சி?
துருக்கியின் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை அடுத்து, இதனோடு ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வருகிறதா என அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துருக்கியில் சர்வாதிகார ஆட்சி
துருக்கி நாட்டின் ஜனாதிபதி தாயீப் எர்டோகன்(69) என்பவர் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
@ap
மேலும் 2003ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் 2014ல் பதவியேற்றார், ஆனால் 2014ல் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு நாட்டின் உச்சபட்ச அதிகாரமாக ஜனாதிபதி பதவி கொண்டு வரப்பட்டுள்ளது.
@ap
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார்.
மேலும் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், நில நடுக்கத்தின் போது நடைபெற்ற மந்தமான மீட்புப் பணி, இவற்றை தொடர்ந்து அம்மக்கள் ஜனாதிபதி மீது அதிருப்தியில் உள்ளனர். சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும் அவர் மீது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில் நேற்று துருக்கியில் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டிலுள்ள எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எர்டோகனுக்கு எதிராக கெமல் கிலிக்டரோக்லு தலைமையில் போட்டியிட்டுள்ளனர்.
@ap
அதே சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலும் துருக்கியில் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளாரான கெமல் வெற்றி பெற, அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் 20 ஆண்டு கால எர்டோகனின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வருமா? என துருக்கி மக்கள் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
@ap
இந்நிலையில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய எர்டோகன்,
'முதல் சுற்றில் தேர்தல் முடிந்ததா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, நமது நாட்டு மக்கள் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்திருந்தால், அதுவும் வரவேற்கத்தக்கது,’ என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து வெளிநாட்டில் வாழும் துருக்கிய குடிமக்களின் வாக்குகள், இன்னும் கணக்கிடப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் 2018 இல் 60% வெளிநாட்டு வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.