பிரித்தானிய பிரதமருக்கு குண்டுகளுடன் துப்பாக்கியை பரிசளித்த தலைவர்
துருக்கியில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதியான ரெசெப் தையிப் எர்டோகன் பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மருக்கு துப்பாக்கி ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமருக்கு துப்பாக்கியை பரிசளித்த தலைவர்
துருக்கி ஜனாதிபதியான எர்டோகன், ஸ்டார்மருக்கு அவரது பெயர் பொறித்த துப்பாக்கி ஒன்றையும், அதற்கான குண்டுகளையும் பரிசாக வழங்கியுள்ளார்.

என்றாலும் ஸ்டார்மர் அதை பிரித்தானியாவுக்குக் கொண்டுவரவில்லை. அதை துருக்கியிலுள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் அவர்.
துருக்கி ஜனாதிபதியான எர்டோகன், அந்த துப்பாக்கியை துருக்கியிலிருந்து ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டாலும், அதை ஸ்டார்மர் பிரித்தானியாவுக்குக் கொண்டுவரவில்லை.
காரணம், குண்டுகளுடன் கூடிய ஒரு துப்பாக்கியை பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்வது சட்டப்படி குற்றமாகும்!
இன்னொரு விடயம் என்னவென்றால், ஸ்டார்மருக்கு மட்டுமல்ல, நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் அனைவருக்குமே அவரவர் பெயர் பொறித்த துப்பாக்கிகளை வழங்கியுள்ளாராம் எர்டோகன்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |