துருக்கி சுரங்கத்தின் குண்டுவெடிப்பு விபத்தில் 22 பேர் பலி: 100 மேற்பட்டோர் பூமிக்கடியில் சிக்கி தவிப்பு
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 22 பேர் உயிரிழப்பு.
விபத்து ஏற்பட்ட இடத்தை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சனிக்கிழமை பார்வையிடுகிறார்.
துருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு துருக்கியின் பார்டின் (Bartin) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் டஜன் கணக்கானோர் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
?#UPDATE: Death toll rises to 22 people at the mine explosion in #Bartın, says #Turkey health minister pic.twitter.com/DfKebNN6Dz
— Breaking News 24/7 (@Worldsource24) October 14, 2022
குண்டுவெடிப்பின் போது சுமார் 110 பேர் வரை சுரங்கத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அதில் பலர் மேற்பரப்பில் இருந்து 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கர வெடிப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் இறந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்தின் பாறைகளை தோண்டி உயிர் பிழைத்தவர்களைச் சென்றடைய முயன்று வருவதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
getty
முன்னதாக எட்டு சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்க வெடிப்பில் இருந்து தப்பிச் சென்றதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், நிலக்கரி சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன், ஃபயர் டேம்பில் வெடித்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக துருக்கியின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விபத்து ஏற்பட்ட சுரங்கத்தை துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் சனிக்கிழமை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு; ஹாரி பாட்டரில் “ஹாக்ரிட்” ஆக நடித்த ராபி கோல்ட்ரேன் உயிரிழப்பு: சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி
இந்த வெடிப்பு விபத்தில் இருந்து தப்பித்த நபர்களில் ஒருவர், தூசி மற்றும் புகை இருந்ததால் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.