நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பலியானதையும் நையாண்டியாக்கிய பிரெஞ்சு பத்திரிகை: கடும் சர்ச்சை
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பல்லாயிரம் உயிர்களை பலியான விடயத்தையும் நையாண்டி செய்துள்ள பிரெஞ்சு பத்திரிகை ஒன்றின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
நையாண்டி பத்திரிகையும் விளைவுகளும்
பிரான்சிலிருந்து சார்லி ஹெப்டோ என்றொரு நையாண்டி பத்திரிகை வெளியாகிறது. உலகில் நடக்கும் நிகழ்வுகளை நையாண்டி செய்து கார்ட்டூன்களாக வெளியிவது இந்த பத்திரிகையின் வேலை.
அப்படி ஒருமுறை முகமது நபியை கேலி செய்து அந்த பத்திரிகை கார்ட்டூன் வெளியிட, ஆத்திரம் கொண்ட அல்கொய்தா அமைப்புடன் தொடர்புகொண்ட சகோதர்கள் இருவர், 2015ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 7ஆம் திகதி, சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டார்கள்.
✏️Le dessin du jour, par #Juin pic.twitter.com/kPcEqZDocO
— Charlie Hebdo (@Charlie_Hebdo_) February 6, 2023
உயிரிழப்பையும் நையாண்டி செய்துள்ள சார்லி ஹெப்டோ
இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட நிலநடுக்கம் தொடர்பான நையாண்டி கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை.
கார்ட்டூனிஸ்ட் ஒருவர் வரைந்துள்ள அந்த கார்ட்டூனில், நிலநடுக்கத்தால் சிதிலமடைந்து கிடக்கும் கட்டிடங்களுக்கு அருகே, ’No need to send tanks’, அதாவது ’போர் வாகனங்களையே அனுப்பத் தேவையில்லை’ என எழுதப்பட்டுள்ளது.
எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பு
சார்லி ஹெப்டோ பத்திரிகையின் இந்த மோசமான செயலுக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. சமூக ஊடகங்களில், இந்த செயல் அருவருப்பானது, அவமானம், வெறுப்பூட்டும் செயலுக்கு இணையானது என கடுமையாக விமர்சித்துள்ளனர் மக்கள்.
Sara Assaf என்னும் பெண், உங்கள் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடந்தபோது நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால், உங்களுக்கு அளித்த ஆதரவை இப்போது நாங்கள் விலக்கிக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், உங்கள் வேதனையின்போது நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தோம், இப்போது நாங்கள் மனித இனப் பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கிறோம், இது நையாண்டி செய்யும் விடயமல்ல என குறிப்பிட்டுள்ளார்.