கடலில் மூழ்கடிக்கப்பட்ட Airbus விமானம் - டைவிங் சுற்றுலாவின் புதிய கவர்ச்சி
Turkeys sunken Airbus A300 becomes dive spot: துருக்கியில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஏர்பஸ் விமானம் இப்போது சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
கடலுக்குள் ஏர்பஸ் A300 விமானம்
2016-ஆம் ஆண்டு துருக்கியின் குசாதாசி கடற்கரையில் ஓய்வு பெற்ற ஏர்பஸ் A300 விமானம் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது.
கடலுக்கடியில் செயற்கை பாறையை உருவாக்கி, கடல் உயிரினங்களுக்கு புதிய வாழ்விடமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான டைவிங் அனுபவமாகவும் மாற்றுவதற்காக இவாறு செய்யப்பது.

54 மீட்டர் நீளமுடைய இந்த விமானம், மூன்று மணி நேரத்தில் 22 மீட்டர் ஆழத்தில் கடலடியில் நிலை கொண்டது.
1980-ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் முதலில் கிரீஸின் ஒலிம்பிக் ஏர்வேஸில் பயணிகள் சேவையில் இருந்தது. பின்னர் சரக்கு விமானமாக துருக்கியில் பணி செய்தது. அதிக பராமரிப்பு செலவினால் ஓய்வு பெற்றபோது, அய்டின் நகராட்சி இதனை வாங்கி, கடலடியில் மூழ்கடிக்கும் திட்டத்தை மேற்கொண்டது.
மூழ்கடிக்கும் முன், விமானத்தின் ஆபத்தான பாகங்கள், கண்ணாடிகள், கூர்மையான உதிரிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் டைவிங் செய்யும் பயணிகள் பாதுகாப்பாக உள்ளே சென்று ஆராய முடிகிறது.
விமானத்தின் உட்புறம் வழியாக நீந்திச் சென்று, காக்பிட் வரை சென்று அமர்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரிய அனுபவமாக உள்ளது.
இந்த செயற்கை பாறை, கடலடியில் பல்வேறு மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களை ஈர்க்கிறது. துருக்கி இதற்கு முன் சிறிய விமானங்களை மூழ்கடித்திருந்தாலும், இவ்வளவு பெரிய அளவிலான விமானம் கடலடியில் வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
இன்று, குசாதாசி கடற்கரை, டைவிங் ஆர்வலர்களுக்கு உலகின் முக்கியமான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
கடலடியில் விமானம் வழியாக நீந்திச் செல்லும் அனுபவம், சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |