ஈராக்கில் கதி கலங்கிய பிரபல நாட்டு இராணுவம்.. முகாம் மீது பொழிந்த ஏவுகணை மழை!
ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவ முகாம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கியின் வடக்கு மாகாணமான நினிவேயில் உள்ள துருக்கிய இராணுவ முகாமே ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
நினிவேயில் உள்ள Zelkan துருக்கிய இராணுவ முகாமுக்கு அருகே சுமார் 5 ஏவுகணைகள் விழுந்தது.
இதில், 3 ஏவுகணைகள் வெடித்து சிதறியது மற்ற இரண்டு வெடிக்காமல் போனது என பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி Shafaq news agency அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்காக துருக்கிய இராணுவம் வடக்கு ஈராக்கில் செயல்பட்டு வருகிறது.
1980 களின் முற்பகுதியில் இருந்து துருக்கியில் குர்திஷ் சுயாட்சியை நிறுவ முயன்று வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) எதிராக துருக்கி அரசு போராடி வருகிறது.
PKK மற்றும் துருக்கி இடையே 2013ல் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆனால் PKK போராளிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் பலதாக்குதல்களால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அது முறிந்தது.