8,500 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர்: அதிரவைக்கும் அவரது பின்னணி
துருக்கியை சேர்ந்த சமய தலைவர் ஒருவருக்கு, தமது பாலியல் அடிமைகளை சிறப்பு அறுவைசிகிச்சை மேற்கொள்ள கட்டாயப்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
8,658 ஆண்டுகள் சிறை
துருக்கியை சேர்ந்த 66 வயதான அத்னான் ஒக்டர் என்பவரே புதிதாக சமயம் ஒன்றை உருவாக்கி, சிறார்களை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாகவும், பாலியல் அடிமைகளை வைத்துக் கொண்டதாகவும், அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி மேற்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்.
இவர் மீதான விசாரணை முடிவடைந்து அளிக்கப்பட்ட ரத்து செய்யப்பட்டாலும், மேல்முறையீட்டு முன்னெடுக்கப்பட்டு, நவம்பர் 16ம் திகதி அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
@getty
முன்னர் அளிக்கப்பட்ட தண்டனையை விட இது 8 மடங்கு அதிகம் என்றே தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, இவருக்கு நெருக்கமான 14 பேர்களுக்கும் பல நூறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வசீகரிக்கும் மொடல்கள் சூழ
தனக்கு சொந்தமான A9 தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுத்த பின்னர் அத்னான் ஒக்டர் துருக்கியில் பிரபலமானார். ஆனால் அதன் பின்னர் இஸ்லாமிய மதம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தொடர்பிலும் வசீகரிக்கும் மொடல்கள் சூழ இவர் நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளார்.
இவர் உருவாக்கிய சமயத்தில் 160 உறுப்பினர்கள் வரையில் ஒரு கட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும், இவருடன் தொடர்புடைய இளம் பெண்கள் பூனைக்குட்டிகள் என அறியப்பட்டார்கள், இவர்களே தங்கள் சமயத்தின் கொள்கைகளையும் பரப்பி வந்தார்கள்.
பல பெண்கள் வாக்குமூலம்
ஆனால் வெளியேறிய பல பெண்கள், தாங்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக புகார் தெரிவித்துள்ளனர். Seda Isildar என்பவர் தமது பாடசாலை காலகட்டத்தில் அத்னான் ஒக்டாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும், ஆனால் சில நாட்களிலேயே அவரை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
@getty
மேலும், இவரது கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் Seda Isildar தெரிவித்துள்ளார். பொலிசார் மேற்கொண்ட சோதனயில் ஒக்டர் குடியிருப்பில் இருந்து 69,000 கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
Ugur Sahin என்பவர் ஒக்டர் குழுவுக்காக சுமார் 200 பெண்களை இணைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.