பிரித்தானியாவுக்கு அனுப்ப மாட்டோம்! 79 வயது மூதாட்டியை பிணைக் கைதியாக வைத்திருக்கும் மருத்துவர்கள்
துருக்கியில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரித்தானிய மூதாட்டியை, மருத்துவ கட்டணம் செலுத்தப்படும் வரை விடுவிக்க மாட்டோம் என மருத்துவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய மூதாட்டி
பிரித்தானியாவைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி ஒருவர், துருக்கி நாட்டிற்கு நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு மாரடைப்பு உண்டானதாக அவரது மகள் லூசி க்ரோவ்ஸ் கூறியுள்ளார்.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது சிகிச்சைக்கு 1,90,000 பவுண்டுகள் செலுத்தப்பட்ட நிலையில், மூதாட்டியின் குடும்பம் மேலும் 100,000 பவுண்டுகளை செலுத்த வேண்டும் என்றும், அதுவரை பிரித்தானியாவுக்கு அவரை அனுப்ப மாட்டோம் என்றும் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சி அளித்தனர்.
பிணைக் கைதி
இதன் காரணமாக துருக்கியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் குறித்த மூதாட்டி பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் மூதாட்டியை திரும்பப் பெற தங்களுக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மூதாட்டியின் மகள் கூறும்போது வாட்ஸ்அப் மூலம் மூன்று முறை மட்டுமே தாயை சுருக்கமாக தொடர்பு கொள்ள முடிந்ததாகவும், அவர் ஒரு விசித்திரமான நாட்டில் தனியாக இருப்பதாகவும் கூறி கவலைப்படுகிறார்.
கவலையில் மகள்
இதற்கிடையில், அவரது காப்பீடு 190,000 பவுண்டுகள் வரை வசூலிக்கப்பட்ட மருத்துவக் கட்டணங்களை செலுத்தும் என்று ஆரம்பத்தில் குடும்பத்தினர் நம்பினர். இருப்பினும், சம்பவத்திற்கு முன் மருத்துவ நிலையை அறிவிக்காததால் அவரது Policy செல்லாது என்று கூறப்பட்டது.
தற்போது தாயை மீட்க நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள லூசி கூறுகையில், 'இதை செய்வதை நான் மிகவும் வெறுக்கிறேன். என்னை அறிந்த எவருக்கும் நான் உதவி கேட்க விரும்பவில்லை என்று தெரியும், ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இது மிகவும் தேவை. ஒரு குடும்பமாக நாங்கள் பேரழிவிற்கு உள்ளாகிவிட்டோம், அவள் பயணம் செய்ய போதுமான அளவு இருந்தவுடன் அவளை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்புவதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.