மனைவி கையில் சாவி..! புகைப்பிடிப்பதை கைவிட தலைக்கவசம் அணிந்த துருக்கியர்
புகைப்பழக்கத்தை கைவிடும் நோக்கில் துருக்கியை சேர்ந்த நபர் ஒருவர் தலைக்கவசம் அணிந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த துருக்கியைச் சேர்ந்த இப்ராஹிம் யூசெல் புகைப் பழக்கத்தை விட்டு விலகுவதற்காக ஒரு வித்தியாசமான தீர்வை கண்டுபிடித்திருக்கிறார்.
குடும்பத்தினரின் கடும் வற்புறுத்தலுக்கு பிறகு குழந்தையின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளன்று புகைப்பழக்கத்தை கைவிடுவதாக உறுதியளித்துள்ளார்.
This gentleman, Ibrahim Yucel, a Turkish man who was 42 years old at the time of the events, decided in 2013 to have his head locked in a cage with the intention of quitting smoking; his wife was the only one who had the keys and she only opened it during meals. pic.twitter.com/1LupljbfYp
— non aesthetic things (@PicturesFoIder) November 7, 2024
இதற்காக, புகைப்பழக்கத்தை கைவிட ஒரு உலோகக் கூண்டுடன் கூடிய தலைக்கவசத்தை அணிந்துள்ளார்.
தனது மனைவியிடம் மட்டும் சாவி இருக்கும் இந்த தலைக்கவசத்தை அணிந்தபடி, அவர் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் மட்டுமே முடியும். இது அவர் புகை பிடிக்காமல் இருக்க உதவும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவரது இந்த புதுமையான முயற்சி சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. சிலர் இவரது உறுதியை பாராட்டினாலும், சிலர் இது கொஞ்சம் விசித்திரமான முயற்சி என்று கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |