நடுவானிலிருந்து சுழன்றவாறு தரையில் விழுந்த ராணுவ விமானம்: பதறவைக்கும் வீடியோ காட்சி
துருக்கிய ராணுவ விமானம் நடுவானில் இருந்து சுழன்றவாறு தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான துருக்கி ராணுவ விமானம்
அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் துருக்கி ராணுவத்துக்கு சொந்தமான C-130 ரக சரக்கு விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விபத்தின் போது விமானத்தில் விமான குழுவினர் உட்பட 20 பேர் வரை பயணித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
🇹🇷| Turkish military cargo plane C130 crashed near the Georgian-Azerbaijan border. pic.twitter.com/iWV8UYHm5L
— Eternal Glory (@EternalGlory0) November 11, 2025
அஜர்பைஜானில் இருந்து துருக்கிக்கு திரும்பி செல்லும் வழியில் இந்த துயரச் சம்பவமானது அரங்கேறியுள்ளது.
துருக்கி ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இந்த சம்பவத்தை அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் வெளியான வீடியோ காட்சி

அஜர்பைஜான் நாட்டு உள்ளூர் ஊடகங்களில் வெளியானதாக பரவும் வீடியோ காட்சிகளில், விமானம் ஒன்று வானில் இருந்து சுழன்றவாறு தரையில் விழுவதும், அதன் பின்னர் கரும்புகை வானில் எழுவதும் பார்க்க முடிகிறது.
அதே சமயம், துருக்கி ராணுவ விமானம் விபத்துக்குள்ளான இடத்தின் புகைப்படங்களை யாரும் வெளியிட வேண்டாம் என்றும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |