துருக்கியில் 100 ஆண்டுகால வரலாற்றில் பெரும் விளைவு! எர்டோகனுக்கு எதிராக களமிறங்கும் தலைவர்
துருக்கி நாட்டில் ஜனாதிபதி எர்டோகனுக்கு எதிராக கெமால் கிலிக்டரோக்லு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பேரழிவு நிலநடுக்கம்
கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 46,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இது பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தை அங்கு அதிகரித்ததால், ஆளும் எர்டோகன் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் மே 14ஆம் திகதி அன்று எதிர்பார்க்கப்படும் முக்கியத் தேர்தலில், ஜனாதிபதி தையிப் எர்டோகனுக்கு எதிராக குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் கெமால் கிலிக்டரோக்லு வேட்பாளராக களமிறங்குகிறார்.
ஆறு கட்சிக் கூட்டணி அவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளது. இவர் எர்டோகனை வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளார்.
@AP
இரண்டு மாதங்களில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற வாக்குகள் இறுக்கமாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், எதிர்க்கட்சி கூட்டணி ஆளும் கூட்டணியை விட சற்று முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்
குடியரசின் 100 ஆண்டுகால வரலாற்றில் பெரும் விளைவை ஏற்படுத்தும் தேர்தலாக பலர் இதனை கருதுகின்றனர். அத்துடன் பொருளாதாரம், குடிமக்கள் உரிமைகள் மற்றும் வெளியுறவு விவகாரங்களில் எர்டோகனின் பல கொள்கைகளை மாற்றியமைப்பதாக எதிர்க்கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.
தேர்தல் குறித்து கிலிக்டரோக்லு கூறுகையில், 'எங்கள் மேசை சமாதான மேசை. நாட்டைச் செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியின் நாட்களுக்கு அழைத்துச் செல்வதே எங்களின் ஒரே குறிக்கோள்' என குறிப்பிட்டுள்ளார்.
@ REUTERS/Umit Bektas
இதற்கிடையில், துருக்கியை யார் வழி நடத்துவது என்பது மட்டுமல்லாமல், அது எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அதன் பொருளாதாரம் எங்கு செல்கிறது மற்றும் உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் மோதலை எளிதாக்குவதற்கு என்ன பங்கு வகிக்கலாம் என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
@AFP