ஜேர்மனியில் AfD கட்சியின் வெற்றி... பயத்தில் ஒரு நாட்டு மக்கள்
Turks in Germany anxious after AfD wins in Saxony-Anhalt: AfD கட்சியின் வெற்றி, ஜேர்மனியில் வாழும் துருக்கி பின்னணி கொண்ட மக்களை அச்சத்திலாழ்த்தியுள்ளது.
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில், 43.8 சதவிகித வாக்குகள் பெற்று தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பயத்தில் ஒரு நாட்டு மக்கள்
Saxony-Anhalt மாகாணத்தில் AfD கட்சி பெற்றுள்ள வெற்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், AfD கட்சி தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி என்பதால், அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட மக்களுக்கு அச்சம் உருவாகிவருகிறது.
குறிப்பாக, துருக்கி பின்னணி கொண்ட மக்கள், அடுத்து என்ன செய்வதென தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்கள்.
Turkish Community in Germany (TGD) என்னும் அமைப்பைச் சேர்ந்த Gökay Sofuoglu என்பவர் கூறும்போது, Saxony-Anhalt மாகாணத்தில் தொழில் செய்துவரும் துருக்கி பின்னணி கொண்டவர்கள், தங்கள் தொழில்களை மூடிவிட்டு, முதலில் மாகாணத்தை விட்டும், பிறகு ஜேர்மனியை விட்டும் வெளியேறும் திட்டத்திலிருப்பதாக தெரிவிக்கிறார்.
இன்னொருபக்கம், AfD கட்சியின் வெற்றியால் ஜேர்மனியின் ஜனநாயக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்றும் கூறுகிறார் Sofuoglu.
மேலும், AfD கட்சியின் வெற்றியால், நாடுமுழுவதும் தேசியவாத வன்முறை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் பரவத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
