தினமும் வெறும் வயிற்றில் மஞ்சளுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து குடிச்சு பாருங்க! உடலில் பல அதிசயங்கள் நடக்குமாம்
நாம் அடிக்கடி பயன்படுத்தும் பல மசாலாப் பொருட்களில் அதிகம் சக்தி வாய்ந்த பொருளாக மஞ்சள் உள்ளது.
மஞ்சளில் உள்ள குர்குமின் கலவை மருந்தாக செயல்படுகிறது. மஞ்சளில் குர்குமின் மட்டுமின்றி, ஆன்டிஆக்ஸிடன்ட், கிருமி நாசினிகள், பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதனும் எந்தபொருளை சேர்த்தாலும் அது இன்னும் பல சக்தியை நமக்கு உடலுக்கு வழங்குகின்றது.
குறிப்பாக கருப்பு மிளகு. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி-6, வைட்டமின் ஈ, தியாமின், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பண்புகள் உள்ளன.
இதனை தண்ணீர் அல்லது பாலில் கலந்து எடுத்துக் கொள்ளலாம். எனவே இது எந்தெந்த நோய்களை தீரக்க உதவும்? எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
நீரை தயாரிக்கும் முறை
1 கிளாஸ் நீரை சூடாக்கி கொதிக்க வைத்து, அதன் பிறகு அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 5-6 பொடித்த கருப்பு மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
அதன் பிறகு வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
நன்மைகள்
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள்- கருப்பு மிளகுத் தண்ணீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடல் எடையை எளிதில் குறைக்கின்றது.
- மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு கலவையானது புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். அதனுடன் கருப்பு மிளகுடன் இணைந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- தினமும் வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் கருமிளகு சேர்த்து குடித்து வந்தால் மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- நீரிழிவு நோயில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் தண்ணீரைக் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து, கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனுடன், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
- காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் கருமிளகு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் சளி மற்றும் இருமல் போன்றவற்றை தடுக்கிறது.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் கருமிளகு கலந்த நீரைக் குடிப்பதால் நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.