முகம் பால் போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மஞ்சள் ஒன்று போதும்.
மஞ்சள்+ தேன் மாஸ்க்
ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தை தண்ணீரில் கழுவிய பின் தடவ வேண்டும்.
10-15 நிமிடங்கள் விட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் + தயிர் மாஸ்க்
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கலாம்.
அவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டுவிட்டு அதன்பிறகு முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
மஞ்சள் + கடலைமாவு மாஸ்க்
2 ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
20 நிமிடம் விட்டுவிட்டு ஸ்க்ரப் செய்து முகத்தை கழுவவும்.
மஞ்சள் + அரிசி மாவு மாஸ்க்
ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர், தேவைப்பட்டால் பச்சை பால் சேர்க்கலாம்.
அவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி சுமார் 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு, ஸ்க்ரப் செய்து முகத்தை கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |