முகம் வெள்ளையாக மாற மஞ்சள் ஒன்று போதும்: இப்படி பயன்படுத்துங்கள்
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த இரண்டு பொருட்கள் போதும்.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கை முறையில் மஞ்சள் வைத்து தயாரிக்கப்படும் பேஸ்பேக்கை பயன்படுத்தி வர முகம் வெள்ளையாகவும் , பொலிவாகவும் இருக்கும்.
மஞ்சள் + பால்
பச்சைப் பாலில் மஞ்சளைக் கலந்து முகம், கை, கால்களில் தடவவும்.
10 நிமிடம் வைத்த பிறகு, அதை கழுவி, லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
இந்த கலவையை வாரத்திற்கு 2-3 முறை தடவினால், சருமத்திற்கு மிருதுவான, பளபளப்பைக் கொடுக்கிறது.
மஞ்சள் + கிளிசரின்
ஒரு சிட்டிகை மஞ்சளுடன் 3 டீஸ்பூன் கிளிசரின் கலந்து, அதை உங்கள் முகத்தில் தடவவும்.
பின் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும்.
மஞ்சள் மற்றும் கிளிசரின் மூலம் மந்தமான சருமம் மற்றும் கறைகளுக்கு நீக்குகிறது.
மஞ்சள் + தக்காளி
தக்காளிச் சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலந்து, வாரத்திற்கு 3 முறை சருமத்தில் தடவி வந்தால், தழும்புகள் குறைந்து ஆரோக்கியமான பொலிவைத் தரும்.
தக்காளி சாறு துளைகளை இறுக்குகிறது, அதிகப்படியான எண்ணெயை குறைக்கிறது.
மேலும், சருமத்தின் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்கிறது.
மஞ்சள் + சந்தனம்
ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் உலர விட்டு கழுவவும்.
இதனை வாரத்திற்கு 2 முறை முகத்தில் தடவினால் சருமம் புத்துணர்ச்சி பெறுவதோடு, இயற்கையான பொலிவையும் தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |