தங்கம் போல் முகம் ஜொலிக்க மஞ்சள் ஒன்று போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் சூரிய கதிர்கள் போன்ற காரணத்தினால் முகத்தில் சுருக்கங்கள், பருக்கள் போன்றவை தோன்றி முகத்தின் அழகை கெடுத்துவிடும்.
அந்தவகையில், தங்கம் போல் முகம் ஜொலிக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 3 ஸ்பூன்
- கடலை மாவு- 5 ஸ்பூன்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- தயிர்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவேண்டும்.
பின் இதனுடன் சிறிதளவு அரிசி மாவு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
இந்த மஞ்சள் பேஸ்பேக்கை தயிருடன் கலந்து முகத்தில் தடவவும்.
பின்னர் நன்கு காய்ந்ததும் கைகளால் லேசாக மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
இந்த மஞ்சள் பேக்கை வாரத்திற்கு தொடர்ந்து 2 முறை பயன்படுத்தலாம்.
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் ஏற்படக்கூடிய தோல் தொற்று பாதிப்புகளைக் குறைக்கிறது.
மேலும், முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |