துஷார் தேஷ்பாண்டேவிற்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய CSK வீரர்கள்!
துஷார் தேஷ்பாண்டேவுக்கு இன்று பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய CSK வீரர்களின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தேஷ்பாண்டேவிற்கு கேக் வெட்டி கொண்டாடிய CSK வீரர்கள்
2020ம் ஆண்டு நடந்த டி20 லீக் தொடரில் அறிமுகமான தேஷ் பாண்டே டெல்லி அணிக்காக விளையாடினார். இதனையிடுத்து ரஞ்சி டிராபியில் மும்பைக்காக 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சமீபத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு கேப்டன் தோனி அட்வைஸ் செய்தார். பல நோ பால்களுக்குப் பிறகு துஷார் தேஷ்பாண்டே மீது தோனி கோபமடைந்தார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே இன்று தன்னுடைய 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் துஷார் தேஷ்பாண்டேவிற்கு சிஎஸ்கே அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
CSK camp celebrating the birthday of their pacer Tushar Deshpande ???
— InsideSport (@InsideSportIND) May 15, 2023
?:- CSK #CSK #tushardeshpande #IPL2O23 #Insidesport #CricketTwitter pic.twitter.com/twgJs1BxVy