உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்?
சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அரசியல் மேடை ஒன்றில், கட்சியின் உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
அவரது பேச்சு உலகத் தமிழர்களை, குறிப்பாக ஈழத் தமிழர்களை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், TVK நடிகர் விஜய் குறித்து பரபரப்பான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, அவர் ஈழத் தமிழர் பிரச்சினைகளில் ஆதரவு அளித்தாரா அல்லது தற்போது அதிலிருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
TVK உறுப்பினர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை தாக்குவதற்காக, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைச் சம்பவத்தைக் குறிப்பிட்டு தமிழீழ தலைவர் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன், பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து, TVK-விற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்த விவரமான காணொளியை இங்கே காணலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |