விஜய் முதலமைச்சராக வேண்டும்.., வேளாங்கண்ணியில் மண்டியிட்டு வழிபாடு செய்த தொண்டர்
விஜய் முதலமைச்சராக வேண்டும் என வேளாங்கண்ணியில் தவெக தொண்டர் முழங்காலால் மண்டியிட்டு வழிபாடு செய்துள்ளார்.
வழிபாடு செய்த கட்சி தொண்டர்
வருகிற 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய், தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என கூறினார்.
அதைத்தொடர்ந்து கட்சியினர், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச்சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தவெக தொண்டர் ஒருவர் முழங்காலால் மண்டியிட்டு 750 மீட்டர் தூரம் சென்று வழிபாடு செய்த்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் வேளாங்கண்ணி புதிய பேராலயத்தில் இருந்து, பழைய மாதா கோவில் சிலுவை பாதை வரை கடும் வெயிலில் முழங்காலால் மண்டியிட்டு சென்று வழிபாடு நடத்தினார்.
மேலும் அப்போது அவர் கையில் தவெக.கட்சிக்கொடியை ஏந்தி சென்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்காக பிரார்த்தனை செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |