விஜயின் மனைவி, குழந்தைகள் ஏன் வரவில்லை? கொடி அறிமுக விழாவிற்கு தவிர்க்கப்பட்டார்களா?
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுக விழாவில் விஜயின் மனைவி மற்றும் குழந்தைகள் வராதது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கொடி அறிமுக விழா
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
இந்நிலையில், பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் விஜயின் பெற்றோர், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் இருபுறமும், வாகை பூ நடுவிலும் உள்ளவாறு கட்சியின் கொடி உள்ளது.
மனைவி மற்றும் குழந்தைகள்?
இந்நிலையில், கொடி அறிமுக விழாவில் விஜயின் மனைவி மற்றும் குழந்தைகள் வராதது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீப காலமாகவே விஜய் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் இவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று சமூக வலைதளங்களில் தகவல்களும் வெளிவருகின்றன.
இதற்கெல்லாம் விஜய் இன்று முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், இந்த நிகழ்வில் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் பங்கேற்கவில்லை.
அதேபோல அண்மையில் விஜய் கலந்து கொண்ட இயக்குநர் அட்லீ மனைவியின் வளைகாப்பு, பாடலாசிரிரியர் விவேக் மனைவியின் வளைகாப்பு, கல்வி விருது விழா ஆகியவற்றிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |