கரூர் த.வெ.க கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்
கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தலைவர்களிடமிருந்து மேலும் இரங்கல் குவிந்துள்ளது.
கரூரில் த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.
— Narendra Modi (@narendramodi) September 27, 2025
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Anguished to know about the tragic loss of lives in a stampede-like unfortunate incident in Karur district of Tamil Nadu. I extend my deepest condolences to the bereaved family members and pray for early recovery of those injured.
— President of India (@rashtrapatibhvn) September 27, 2025
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்
The tragic incident at the public gathering in Karur, Tamil Nadu, has caused unspeakable pain. I extend my deepest condolences to the grieving parents who have lost their loved ones, to their relatives, and to the people of Tamil Nadu in this moment of inconsolable sorrow. I pray…
— Vice-President of India (@VPIndia) September 27, 2025
அண்ணாமலை இரங்கல்
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைவர் கே.அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக அரசும், தமிழக காவல்துறையும் எந்த முன்னேற்பாடும் இல்லை என்று அவர் கடுமையாக சாடினார். இந்த துயர சம்பவம் குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோருகிறார்.
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச்…
— K.Annamalai (@annamalai_k) September 27, 2025
விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்
கூடுதல் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்
கரூர் கொடுந்துயரம்:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 27, 2025
---------------------
கடும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!
உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்றிட அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
-------------------------------------------
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
விஜய்யின் டிவிகே பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட சோகமான கூட்ட நெரிசலால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான தருணத்தில் கேரளா தமிழக மக்களுக்கு துணை நிற்கிறது" என்று சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இரங்கல்
Deeply saddened by the tragic incident at a political rally in Karur, Tamil Nadu, that has taken so many precious lives. My heart goes out to their loved ones, and I wish a swift recovery to all those injured.
— Rahul Gandhi (@RahulGandhi) September 27, 2025
I urge Congress workers and leaders to extend every possible support…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 27, 2025
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும்,…
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மனம் உடைந்துள்ளது: பிரியங்கா காந்தி
Heartbroken by the tragic stampede in Karur, TN.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 27, 2025
My thoughts and prayers are with the families who lost their loved ones in this unimaginable tragedy. May they find strength in this difficult time, and may the injured recover soon.
I urge all Congress workers in the region to…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |