தனி ஆளாக தடுமாறும் விஜய் - அதிருப்தியில் தவெக நிர்வாகிகள்.. விரிவான காணொளி
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாடு குறித்து சமூக செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான ஜெகதீஸ்வரன் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தடுமாறும் விஜய்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
கட்சியின் மாவட்ட செயலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமறைவாக உள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
இந்நிலையில், விஜய் தனித்து முடிவெடுத்துப்பதில்லை எனவும், இதனால் கட்சி நிர்வாகிகள் இந்த விவகாரத்தை எவ்வாறு அணுகுவது என தெரியாமல் அதிருப்தியில் உள்ளதாக சமூக செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலதிக விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |