அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம்
தவெக தலைவர் விஜய் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் மனைவி சங்கீதா, அப்பா சந்திரசேகர் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு கோடிகளில் கடன் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் சொத்து விவரம்
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.
கட்சியின் தலைவரான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், தனது பிராமண பத்திரத்தில் சொத்து மற்றும் கடன் விவரங்களை குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய்யின் அசையும் சொத்து ரூ.404 கோடி, அசையா சொத்து ரூ.115 கோடி என்று கூறப்பட்டுள்ளது. தனது மனைவி சங்கீதாவின் பெயரில் ரூ.15 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்பா, மனைவிக்கு கடன்
மேலும், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருப்பதாகவும், மனைவி சங்கீதா பெயரில் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் 135 காரட் வைர நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தனது பெயரில் கடன் ஏதும் இல்லை என்றும் பிராமண பத்திரத்தில் கூறியுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால், அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடியும், அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடியும், அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜேசன் ரூ.8 லட்சம், மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளார் என்று கணக்கு கூறப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |