நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்! தவெக தலைவர் விஜய் அறிக்கை
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜாக்டோ ஜியோ போராட்டம்
அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தமது அறிக்கையில், திமுக அரசை சாடி பல விடயங்களை குறிப்பிட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
விஜய் அறிக்கை
குறித்த அறிக்கையில், "ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனத்தில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால் அரசு ஊழியர்கள் இன்றும் கூட போராட்டக்களத்தில் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையை முடித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 23, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |