தவெக முதலில் கேட்ட 2 இடங்கள் எப்படி இருக்கும்? - களத்தில் இருந்து விரிவான அலசல்
கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவத்தில், சிபிஐ விசாரணை அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் எனக்கோரி தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே தாமதமாக வந்த விஜய்; உயிர்ச்சேதம் குறித்து எச்சரித்தும் கேட்கவில்லை - எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்
விஜய் பேசும் போது மின்தடை ஏற்பட்டது, தாங்கள் கேட்ட இடத்தை கொடுப்பதற்கு பதிலாக அதை விட குறுகலான இடத்தில் காவல்துறை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்தடை ஏன் செய்யப்பட்டது, தவெக தரப்பில் கேட்ட 2 இடங்கள் எப்படி உள்ளது, காவல்துறை அனுமதி வழங்கிய இடம் எப்படி உள்ளது என்பதை இந்த காணொளியில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |