சென்னை திரும்பும் விஜய் - மீண்டும் சிபிஐ விசாரணைக்கு சம்மன்?
விஜய் சிபிஐ விசாரணை முடித்து, சென்னை புறப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ விசாரணையில் விஜய்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் விசாரணைக்காக நேரில் ஆஜராக சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது.

இதன்படி நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதில், கரூர் மக்கள் சந்திப்பிற்கு தாமதமாக வந்தது ஏன்?, சம்பவம் நடந்த உடன் அந்த இடத்தை விட்டு வெளியேறியது ஏன்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் சம்மன்?
வாய்மொழியாக மட்டுமல்லாது எழுத்துபூர்வமாகவும் விஜய்யிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இரவு டெல்லியில் தங்கிய விஜய் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விஜய் மீண்டும் வரும் ஜனவரி 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில், ஜனநாயகம் தணிக்கை சான்றிதழ் தொடர்பான மேல்முறையீடு வழக்கு ஜனவரி 15 ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |