பொய் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்- நடிகர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு நடத்தப்படும் பராட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய விடயங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய் நடத்தும் பாராட்டு விழா
10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவை தமிழக வெற்றிக் கழகம் நடத்துகிறது.
குறித்த விழாவானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஒவ்வொரு மாணவர் அருகில் சென்று அமர்ந்து பேசியுள்ளார்.
மேலும் இவர் அரசியலுக்கு வந்ததன் பிறகு நடத்தப்படும் முதல் பாராட்டு விழா என்பதால் இவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது.
நடிகர் விஜய் மேடையில் பேசியது என்ன?
"நடந்து முடிந்துள்ள 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற எனது தம்பி தங்கைகளுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தோழர்களுக்கும் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கம்.
மாணவர்கள் அனைவரும் எடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறீர்கள். நீங்கள் தேர்வு செய்யும் துறையில் நீங்கள் முழு ஈடுபாட்டையும் காட்டவும். அப்போது தான் நீங்கள் அனைவரும் சிறந்த இடத்திற்கு செல்லலாம்.
மேலும் அரசியல் துறையிலும் நல்ல படித்தவர்கள் வர வேண்டும் எனவும் பொய் பிரசாரம் செய்யும் அரசியல்வாதிகளை நம்புவதற்கு பதிலாக நல்ல தலைவரை யோசித்து முடிவெடுங்கள், அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை.
மேலும் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவும். தவறான பழக்கத்தில் இருக்கும் நண்பர்களை முடிந்த வரையில் தடுக்கவும். நீங்கள் யாரும் அதை எப்போதும் செய்ய வேண்டாம்" எனவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |