கரூரில் தவெக விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழப்பு
கரூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர்.
இதில் 6 குழந்தைகள், 9 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் அடங்குவர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிகழ்வு விஜயின் மாநில சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கூட்டம் அதிகமாக திரண்டதால் பலர் மயக்கம் அடைந்து அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு சிகிச்சை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க கனவுக்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் செல்லும் 500 ஆண்டுகள் பழமையான கோவில் - பூஜை, காணிக்கை தேவையில்லை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
TVK, Tamilaga Vettri Kazhagam, TVK Vijay, actor Vijay in Karur, Karur Stampede