தவெக முதல் பொதுக்குழு.., ஆவி பறக்க தயாராகும் அறுசுவை உணவு: வெளியான பட்டியல்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
திருவான்மியூரில் உள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் இந்த குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 7.30 மணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து 2,150 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
மொத்தமாக 15 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, இந்தி திணிப்பு, நாடாளுமன்ற எம்பிக்கள் எண்ணிக்கை குறைப்பு, டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான காலை மற்றும் மதிய உணவு பட்டியல் வெளியாகி உள்ளது.
காலை டிபன் 1500 பேருக்கும், மதிய உணவு 2500 பேருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, காலை உணவாக பொங்கல், வடை, சட்னி, சாம்பார், டீ வழங்கப்பட உள்ளது.
மேலும் மதிய உணவாக,
- வெஜ் மட்டன் பிரியாணி
- சாதம்
- சைவ மீன் குழம்பு
- சாம்பார்
- மிளகு ரசம்
- உருளை பட்டாணி வறுவல்
- தயிர் வடை
- அப்பளம்
- வெற்றிலை பாயாசம்
- இறால் 65
- இஞ்சி துவையல்
- தயிர் பச்சடி
- சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா
- அவியல்
- ஆனியன் மணிலா
- பகோடா
- மோர்
- ஐஸ்கிரீம்
- மால் பூவா ஸ்வீட்
- வெஜ் சூப்
- ஊறுகாய்
ஆகிய உணவுகள் வழங்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |