ஒரே பைக்கில் சென்ற இரட்டை சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் ஒரே பைக்கில் பயணித்த மூவர், லொறி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அடையாளம் தெரியாத லொறி
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் அர்பாஸ் கான், அடில் கான்.
இவர்கள் இருவரும் சர்பராஸ் என்பவருடன் ஒரே பைக்கில் திக்பால்கஞ்ச் பாதாய் பகுதியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சராய் மணிஹார் கிராமத்திற்கு அருகே பைக் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத லொறி ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.
மூவரும் பலி
இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |