ட்விட்டரில் 'பேச்சு சுதந்திரம்' என்று நான் எதைச் சொல்கிறேன் என்றால்.. எலான் மஸ்க் விளக்கம்
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், தான் அடிக்கடி 'பேச்சு சுதந்திரம்' என்று கூறுவது என்ன என்பதை விளக்கியுள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டரை, உலகத்தின் நம்பர் 1 பணக்காரரான எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கையகப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்படுவதற்குமுன்பும், அதற்கு பிறகும் ட்விட்டரில் பேச்சு சுதந்திரம் குறித்து அடிக்கடி பதிவிட்டுள்ளார்.
தன்னை பிடிக்காதவர்கள், தனக்கு எதிராகவும், தனது கருத்துக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கும் எவரும் ஒரு பொதுவான அல்லது தான் இருக்கும் அதே சமூக ஊடகத்தில் இருக்கலாம், அவர்களது கருத்தை தெரிவிக்கலாம். இதற்காக அவர்கள் நீக்கப்படவோ அல்லது அவர்களது கருத்து கட்டுப்படுத்தவோ கூடாது. அவர்கள் நினைப்பதை பேசுவது அவர்களது உரிமை என்ற கருத்து எலானுக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம் எனறு கிடையாது என்கிறார் மஸ்க்.
By “free speech”, I simply mean that which matches the law.
— Elon Musk (@elonmusk) April 26, 2022
I am against censorship that goes far beyond the law.
If people want less free speech, they will ask government to pass laws to that effect.
Therefore, going beyond the law is contrary to the will of the people.
இந்நிலையில், ட்விட்டரில் "பேச்சு சுதந்திரம்" என்று தான் கூறுவது என்ன என்பதை விளக்கி இப்போது ஒரு டீவீட்டை போஸ்ட் செய்துள்ள மஸ்க்.
அவர் தனது ட்வீட்டில், ""சுதந்திரமான பேச்சு" என்பதன் மூலம், நான் சட்டத்திற்குப் பொருந்துவதைக் குறிக்கிறேன். நான் சட்டத்திற்கு அப்பாற்பட்ட தணிக்கைக்கு எதிரானவன்.
மக்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்க விரும்பினால், அதற்கான சட்டங்களை இயற்றுமாறு அரசிடம் கேட்பார்கள். எனவே, சட்டத்தை மீறுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், ஒரு நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு யார் வேண்டுமானாலும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கலாம், தனிப்பட்ட முறையில் ஒருவர் மீது மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்பதை எலான் மஸ்க் தெளிவுபடுத்தியுள்ளார்.