விரைவில் அறிமுகமாகும் எடிட் பட்டன்...பயனர்களின் பலநாள் கோரிக்கையை நிறைவேற்றியது ட்விட்டர்!
ட்விட்டரில் அறிமுகமாகும் எடிட் பட்டன் வசதி.
எடிட் பட்டனைப் பயன்படுத்த ட்விட்டர் பயனர்கள் மாதத்திற்கு $4.99 செலுத்த வேண்டும்.
ட்விட்டர் தனது கட்டணச் சந்தாதாரர்கள் கோரி வந்த எடிட் பட்டனை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. உலக அளவில் செய்திகள் பரிமாற்றத்தில் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் முன்னணியில் இருக்கின்றன.
அதிலும் அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பட பிரபலங்கள் வரை தங்களது அதிகாரப்பூர்வ தகவல்களை பொதுவெளியில் தெரிவிப்பதற்கு ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
if you see an edited Tweet it's because we're testing the edit button
— Twitter (@Twitter) September 1, 2022
this is happening and you'll be okay
இவ்வாறு பகிரப்படும் தகவல்களில் ஏற்படும் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றை தற்போது வரை திருத்த இயலாது, மாறாக மொத்தமாக பதிவையே நீக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்தநிலையில் ட்விட்டர் தனது கட்டணச் சந்தாதாரர்கள் கோரி வந்த எடிட் பட்டனை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.
இந்த வசதியானது மைக்ரோ பிளாக்கிங் சேவையின் படி, எடிட் பட்டன் தற்போது உள்நாட்டில் சோதனை செய்து வருவதாகவும், அடுத்தது ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Credits: Bryce Durbin/TechCrunch
எடிட் பட்டனைப் பயன்படுத்த ட்விட்டர் புளூ சேவைக்கு பயனர்கள் குறைந்தபட்சம் ஆரம்பத்தில் மாதத்திற்கு $4.99 செலுத்த வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எடிட் வசதியின் போது கருத்தினை வெளியிட்ட 30 நிமிடங்களுக்குள் அவர்கள் தங்கள் ட்வீட்களை "சில முறை" திருத்த முடியும் என்று ட்விட்டர் ஒரு வலைப்பதிவு தனது இடுகையில் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறு திருத்தப்பட்ட ட்விட்களை குறிக்கும் வகையில், லேபிள், நேர முத்திரை மற்றும் ஐகான் போன்ற அடையாளங்காட்டிகளைக் கொண்டிருக்கும். அதைப்போல ட்விட்டர் பயனர்கள் ட்வீட்டைக் கிளிக் செய்து அசல் உள்ளடக்கத்தில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும் பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அத்துமீறிய சீனாவின் ஆளில்லா ட்ரோன்...சுட்டுவீழ்த்திய தைவான் ராணுவம்
ட்விட்டரில் 320 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.