ஆப்கான் தலைநகரில் 2 பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை! அதிகரிக்கும் பதற்ற நிலை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக நாட்டின் தலைநகரான காபூலில், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள், மருத்துவர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் உட்பட பல உயர்மட்ட நபர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் கொலைசெய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி கடந்த சில மாதங்களாகவே மிகவும் பதற்ற நிலையில் காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் துருப்புக்களின் அளவை 2,500-ஆகக் குறைத்ததாக பென்டகன் அறிவித்து 2 நாட்களே ஆன நிலையில், இன்று அதிகாலை வடக்கு காபூலில் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஓரூ கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் ஆப்கானிஸ்தானின் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய இரண்டு பெண் நீதிபதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் டிரைவர் காயமடைந்தார்.
இந்த துப்பாக்கிச்சுட்டில் இறந்த பெண்கள் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் என்பதைத் தவிர, அவர்களை பெயரால் அடையாளம் காணபடவில்லை என கானிஸ்தானின் உச்ச நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அஹ்மத் பாஹிம் காவிம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த 3 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் குறிவைத்த தாக்குதல்களுக்கு ஆப்கான் அரசாங்கம் தாலிபான் மீது குற்றம்சாட்டிவருகிறது. ஆனால் அதனை மறுத்துள்ள கிளர்ச்சிக் குழு, சமாதான பேசசுவார்த்தைகளை கெடுப்பதற்காக அரசாங்கமே இந்தக் கொலைகளை நடத்துவதாக குற்றம்சாட்டிவருகின்றன.
இந்த மாத தொடக்கத்தில் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் கத்தாரில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.