ரஷ்ய துருப்புகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்கான பிரித்தானிய ஊடகவியலாளர்கள்
உக்ரைனில் பணியாற்றும் பிரித்தானிய ஊடகவியலாளர்கள் இருவர் ரஷ்ய துருப்புகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்கானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்க்கும் 20 மைல்கள் தொலைவில் இருந்து பணியாற்றி வந்துள்ள இரு பிரித்தானிய ஊடகவியலாளர்கள் ரஷ்ய துருப்புகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்காகியுள்ளனர்.
ஊடகவியலாளர் ஸ்டூவர்ட் ராம்சே மற்றும் கேமராமேன் ரிச்சி மோக்லர் ஆகிய இருவருமே குறித்த தாக்குதலில் சிக்கியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவ வாகன அணிவகுப்பை துணிவுடன் உக்ரைன் இராணுவம் முறியடித்த Bucha நகருக்கு செல்லும் வழியிலேயே இருவரும் ரஷ்ய துருப்புகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
உக்ரேனியர்கள் என தங்களை அடையாளம் கண்டுள்ள ரஷ்ய துருப்புகள் சரமாரியாக துப்பாகியால் சுட்டதாக செய்தி ஊடகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் புகுந்த அந்த ஊடகக் குழுவினரை உக்ரைன் பொலிசார் உரிய நேரத்தில் மீட்டு கீவ் நகருக்கு அழைத்து சென்றுள்ளனர்.