கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்: வெளியான முதல் புகைப்படம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் முடித்த தம்பதி
மொத்தம் நான்கு பேர் பலியாகியுள்ள இந்த விமான விபத்தில், இரு திருமணம் முடித்த தம்பதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது புகைப்படம் உள்ளிட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன், உற்றார் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
@dailystar
குறித்த விமானமானது மேற்கு புளோரிடாவில் உள்ள வெனிஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், 64 வயதான வில்லியம், 68 வயதான பாட்ரிசியா, 60 வயதான ரிக்கி பீவர் மற்றும் 57 வயதான எலிசபெத் ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரபப்டி இரவு 9.30 மணியளவிலேயே குறித்த விமான விபத்து தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர உதவிக்குழுவினர் களமிறக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய நால்வர் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய விமானம்
விபத்தில் சிக்கிய நால்வரும் இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றே தெரிய வந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல்கள் தொலைவு பறந்த நிலையில், விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
@dailystar
இதனிடையே, புதன்கிழமை இரவு வில்லியம் மற்றும் ரிக்கியின் உடல்களை மீட்புக் குழுவினர் விமான பாகங்களுடன் கண்டுபிடித்ததாக வெனிஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் பாட்ரிசியா மற்றும் எலிசபெத் பீவர் ஆகியோரின் உடல்களைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.