இந்த கொரோனா தடுப்பூசி... 98 சதவீத இறப்புகளை தடுத்து நிறுத்துகிறது: மகிழ்ச்சி தரும் செய்தி

Covid Israel Coronavirus CoronavirusVaccine
By Kaviarasan May 06, 2021 11:50 PM GMT
Report

முதல் மற்றும் இரண்டாவது பைசர் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், அது 98 சதவீத இறப்புகளை தடுத்து நிறுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், தடுப்பூசி தான் அதற்கு நிரந்தர தீர்வு என்று கூறப்பட்டது.

இதனால் உலகின் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தன.

இருப்பினும் அவை பல சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. அந்த வகையில், Pfizer தடுப்பூசி பிரித்தானியா உட்பட பல நாடுகளில் போடப்பட்டு வருகிறது.'

இந்த கொரோனா தடுப்பூசி... 98 சதவீத இறப்புகளை தடுத்து நிறுத்துகிறது: மகிழ்ச்சி தரும் செய்தி | Two Doses Of Pfizer Vaccine Stops 98 Of Deaths

இது முதல் டோஸ் 14 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் என்று பிரிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதன் படி Pfizer-ன் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், அது 58 சதவீத பாதுகாப்பை அளிப்பதாகவும், அதே சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போடப்பட்டால், அது 76 சதவீத பாதுகாப்பை தருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வு இஸ்ரேலில் நடத்தபட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பூசியின் செயல் திறன் இஸ்ரேலின் தேசிய அளவிலான மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டவை. இஸ்ரேலில் இப்போது பாதிக்கும் மேற்பட்ட மக்கள், அதாவது 56 சதவீதம் மக்கள் Pfizer தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

அங்கு கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றிற்கு 10000-மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இதன் மூடிவு 100 பேர் வரை மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் குறைவுக்கு காரணம், தடுப்பூசி தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசி... 98 சதவீத இறப்புகளை தடுத்து நிறுத்துகிறது: மகிழ்ச்சி தரும் செய்தி | Two Doses Of Pfizer Vaccine Stops 98 Of Deaths 

இதன் காரணமாக, இஸ்ரேலின் பொருளாதாரம்  இப்போது முழுமையாக மீண்டும் மீட்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மக்கள் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது போன்ற வெளிப்புற கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன.

கொரோனாவிற்கு எதிராக பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை அவர்களின் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சவால்கள் உள்ளன. தடுப்பூசிகள் மற்றும் இயற்கை தொற்று இரண்டிலிருந்தும், தடுப்பூசி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை என்று அஞ்சப்படுகிறது.

இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் முன்னணி எழுத்தாளர் மற்றும் மருத்துவரான Sharon Alroy-Preis கூறுகையில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் தொகையில் அதிக விகிதத்தில் உள்ள நாடு இஸ்ரேல் என்பதால், தடுப்பூசியின் செயல்திறனை தீர்மானிக்க இஸ்ரேல் ஒரு தனித்துவமான நிஜ உலக வாய்ப்பை வழங்குகிறது என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலின் சுகாதார அமைச்சகத்தினால் பதிவு செய்யப்பட்ட தேசிய தொற்று கண்காணிப்பு தரவைப் பயன்படுத்தி, கடந்த ஜனவரி 24 முதல் ஏப்ரல்  3-ஆம் திகதி வரை ஆய்வாளர்கள் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்.

அதன் படி, ஏப்ரல் 2-ஆம் திகதிக்குள், 16 வயதிற்கு மேற்பட்டவர்களில் 72 சதவீத பேரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத பேரும் இரண்டு டோஸிற்கான Pfizer தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்.

இது 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 96.5 சதவீத பாதுகாப்பையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக 98 சதவீத பாதுகாப்பையும், மரணத்திற்கு எதிராக 98.1 சதவீத பாதுகாப்பையும், வழங்குவது தெரியவந்துள்ளது.

இதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வயதானவர்களின் பாதுகாப்புகள் இளையோரைப் போலவே வலுவாக இருந்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொற்றுநோய்க்கு எதிராக 94.1 சதவீத பாதுகாப்பையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக 96.9 சதவீத, மற்றும் மரணத்திற்கு எதிராக 97 சதவீத பாதுகாப்பையும் தருவதாகவும், இது இரண்டு டோஸைப் பெற்ற ஒரு வாரத்திற்கு பின்பு தெரியவந்ததாக கூறியுள்ளனர்.

அதிகமான மக்கள் தடுப்பூசி பெற்றதால் தினசரி நோய்த் தொற்றுகள் தொடர்ந்து குறைந்து வருவதை ஆய்வறிக்கை காட்டுவது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US