பட்டாசு வெடிக்க நேர அனுமதி வழங்கிய தமிழக அரசு!
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதில் நேர அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பட்டாசு வெடிக்க அனுமதி
வருகின்ற 12 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் பலரும் புத்தாடை அடைந்து பட்டாசு கொழுத்தி மகிழ்வது வழக்கம்.
ஆனால் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதால், நீதிமன்றத்தில் கடந்த காலத்தில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இவ்வாண்டு தீபாவளி பண்டிகை நேரத்தில் இரண்டு மணித்தியாலம் படட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்.
மேலும் கடந்த ஆண்டும் இரண்டு மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |