வெளிநாடொன்றில் இரண்டு இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
சமீபத்தில் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம், சோகத்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள்
டிசம்பர் மாதம் 28ஆம் திகதி, தெலங்கானாவைச் சேர்ந்த தினேஷ் (G Dinesh, 22) உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். சில நாட்களுக்குப் பின் ஆந்திராவைச் சேர்ந்த நிகேஷ் (Nikesh, 21) அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவில் சந்தித்துக்கொண்ட இருவரும் நண்பர்களாகி, பின்னர் ஒரே அறையில் தங்கியுள்ளார்கள்.
கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, தினேஷுன் நண்பர்கள் இந்தியாவிலிருக்கும் அவரது பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளார்கள்.
தினேஷும் அவரது நண்பரான நிகேஷும் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் கூற, தினேஷின் பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
இதில் கூடுதல் சோகம் என்னவென்றால், நிகேஷின் குடும்பத்தினருடன் தினேஷின் பெற்றோருக்கு தொடர்பு எதுவும் இல்லை. அத்துடன், நிகேஷ் மரணம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவரது சொந்த ஊரான Srikakulam மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், மாணவர்கள் இருவரும் எரிவாயுக் கசிவால் உயிரிழந்ததாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |