திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்..காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்
அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கத்தியால் மிரட்டி
அவுஸ்திரேலியாவின் சிட்னி தென்மேற்கு பகுதியில், பஞ்சரான டயரை 27 வயதுப் பெண்ணொருவர் மாற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது இருவர் அவரை தாக்கியதுடன் கத்தியால் மிரட்டி, கார் நோக்கி இழுத்து செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனே பொதுமக்கள் தலையிட்டு அப்பெண்ணை மீட்டுள்ளனர்.
என்றாலும், இருவரும் SUV வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தாக்கப்பட்ட பெண் முகம் மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையில், துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
கைது நடவடிக்கை
பின்னர் 12 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆபர்ன் என்ற பகுதியில், வெவ்வேறு இடங்களில் காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். இரண்டு மணிநேரத்திற்கு குறைவான நேரத்தில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த நபர்கள் இருவர் மீதும் தாக்குதல் ஆயுதங்களுடன் கூடிய கொள்ளை, கடுமையான கொள்ளை மற்றும் உடல்ரீதியான வன்முறையைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதான Saer Elchaar மற்றும் 22 வயதான Mohammaed Thahirdeen என்று தெரிய வந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவரின் ஐபோனைத் திருடுவதற்கு 20 சென்டிமீற்றர் நீளமுள்ள மடிக்கத்தி பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |