கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்த இலங்கை தமிழ்ப்பெண்! இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் முகாமில், நண்பரின் மனைவியை வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் உதயன். இவரது மனைவி சங்கீதா, குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து சங்கீதா தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி இரவு சங்கீதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உதயனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த காண்டிபன் என்பவர் போதையில் சங்கீதா வீட்டு கதவைத் தட்டினார்.
அப்போது கதவை திறந்த சங்கீதாவை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார். காண்டிபன் சங்கீதாவை வன்கொடுமை செய்தது குறித்து தனது நண்பன் ஆண்ட்ரிஸ் என்பவரிடம் கூறி உள்ளார்.
இதனை அறிந்த ஆண்ட்ரிஸ் கடந்த 23ஆம் திகதி இரவு சங்கீதா வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த சங்கீதாவை அவரும் மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.
இதை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கீதா, என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பொலிசார் காண்டீபன், ஆண்ட்ரிஸ் ஆகியோரை கைதுசெய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.