புடின் இறந்துவிடுவார்: உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்
பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் Kyrylo O. Budanov, ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழ்ப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், புடின் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்ய செல்வந்தர் ஒருவர் புடினுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்திருந்தார். எப்போது வேண்டுமானாலும், அவர் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்படலாம் என்றும் புடினுக்கு எதிர் கோஷ்டியில் இருந்து சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், புடின் பார்க்கின்சன் முதலான பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், அந்தக் கூற்றுகளுக்கு ஆதாரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.