ஆசையாக கேரளாவுக்கு சுற்றுலா சென்ற தமிழக மாணவிகள்: உயிரிழந்த பரிதாபம்
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவிகள் இருவர், கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் பலியாகினர்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
மாணவர்கள் 47 பேருடன் கிளம்பிய பேருந்து, கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலை வளைவில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் ஆதிகா, வேணிகா என்ற இரண்டு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
அதிவேகமாக பேருந்தை இயக்கிய சாரதி
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காயமடைந்த மாணவ, மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மலைப்பாதையில் வளைவான சாலையில் அதிவேகமாக பேருந்தை சாரதி இயக்கியதே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |